இந்தியாவில், ஜனவரி மாதம், கோவாக்ஸின் (Covaxin) கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டு,  கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கோவேக்ஸின் கோவிஷீல்ட்  தவிர ஸ்புட்னிக் வி (Sputnik V ) தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான சைடஸ் கேடிலா (Zydus Cadila)  தயாரித்துள்ள தடுப்பூசியான சைகோவ்-டி  தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு (ZyCov-D vaccine) இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் சென்ற மாதம் அனுமதி அளித்தது. 12 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி நல்ல பலனை தரும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொரொனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சுறுத்தல் உள்ள நிலையில், இது பெற்றோர்களுக்கு  நிம்மதி அளிக்கும் செய்தியாகும். மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் ICMR ஆகியவற்றுடன் இணைந்து இந்த தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் கண்டறியப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் இரண்டாவது உள்நாட்டு தடுப்பூசியாக ZyCov-D இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ZyCov-D  சிறப்பம்சம் என்னவெனில் இது, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஊசியின்றி, சதையின் சிறிய துளைக்குள் செல்லும்படியான எளிமையான ஒரு மருந்து செலுத்தும் கருவி மூலம் செலுத்தப்படும் மருந்தாகும். அதனால், இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதும் எளிது. 


இந்த தடுப்பு மருந்து 28 நாட்கள் இடைவெளியில், 3 டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். 'சைகோவ்-டி'  (ZyCov-D ) தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டிற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் (டி.ஜி. சி.ஐ) அனுமதி கோரப்பட்டுள்ளத நிலையில், அக்டோபர் மாத தொடக்கத்தில் இதற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ZyCoV-D தடுப்பு எப்போது கிடைக்கும், மருந்தை அரசு எப்போது வாங்க உள்ளது, அதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், “அக்டோபர் முதல் வாரத்தில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படலாம். கொள்முதல் விதிமுறைகள், பிற நிபந்தனைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்ற உடம், உரிய நேரத்தில் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்று கூறினார்.


ALSO READ: வேகமெடுக்கும் கொரோனா பரவல்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR