ZyCov-D: இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி; இன்னும் சில நாட்களில்

முதல் கட்டமாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதலாக ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2021, 02:55 PM IST
  • ZyCoV-D கொரோனா தடுப்பூசி முழுமையான செயல் திறன் கொண்டுள்ளது.
  • புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களில் இருந்து முழுமையான பாதுகாப்பு வழங்கக் கூடியது.
  • மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இது பெற்றோர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி
ZyCov-D: இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி; இன்னும் சில நாட்களில் title=

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசிகள்  (Corona Vaccine) போடும் பணி தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதலாக ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான சைடஸ் கேடிலா தயாரித்துள்ள தடுப்பூசியான சைகோவ்-டி  தடுப்பூசி (ZyCov-D vaccine) விரைவில் குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கொரொனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இது பெற்றோர்களுக்கு  நிம்மதி அளிக்கும் செய்தியாகும்.

'சைகோவ்-டி'  (ZyCov-D ) தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டிற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் (டி.ஜி. சி.ஐ) அனுமதி கோரப்பட்டுள்ளத நிலையில், அடுத்த சில நாட்களில் இதன் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | இந்தியாவிற்கு வர தயாராகும் மாடர்னா; பைசர் மற்றும் பிற தடுப்பூசிகள் நிலை என்ன?

ஜைகோவ்-டி தடுப்பூசி பரிசோதனையில், இந்த தடுப்பூசி பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முடிவுகள் குறித்து மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு வல்லுநர்கள் திருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சைகோவ்-டி உலகின் முதல் டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்து (Corona Vaccine) என்ற பெருமையைப் பெறக் கூடும்.

மேலும், ZyCoV-D கொரோனா தடுப்பூசி முழுமையான செயல் திறன் கொண்டுள்ளது என்றும் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களில் இருந்து முழுமையான பாதுகாப்பு வழங்கக் கூடியது என்றும் சைடல் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது

கடந்த சனிக்கிழமையன்று இந்தியாவிற்கு கிடைக்கப் போகும் தடுப்பூசி தொடர்பான தரவுகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மத்திய அரசு, ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சைகோவ்-டி தடுப்பு மருந்து கிடைக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Covishield, Covaxin: ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா திரிபுகளுக்கு எதிராக செயல்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News