கேதர்நாத் கோயில் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா விமானப்படைக்கு சொந்தமான எம்-17 ரக  சரக்கு ஏற்றிச்செல்லும் ஹெலிகாப்டர் உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் கோவில் அருகே இன்று காலை விபத்துக்குள்ளானது. 


கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டரில் தரையிறங்கும் போது இரும்பு தூண் மீது மோதியதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அந்த பகுதி மக்கள் மற்றும் போலீசார் உடடினயாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த  விபத்தில் படுகாயமடைந்த விமானி  உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.