இந்திய பொருளாதாரத்தை பொருத்தவரையில் 3 டயர்களும் பஞ்சரான கார் போல இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்:-


பொருளாதாரத்தை பொருத்தவரையில் தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசின் செலவினங்கள் முக்கியமானது. இவை அனைத்தும் ஒரு காரின் 4 டயர்களைப் போன்றது ஆனால் தற்போது இதில் 3 டயர்கள் பஞ்சராக உள்ளது.


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் வரியை அதிகரித்து மக்களை மத்திய அரசு வதைத்து வருகின்றது. பிற நாடுகளில் ஜிஎஸ்டி ஒரே வரியாக இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும்தான் 5 நிலைகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.


பாஜகவின் நடவடிக்கைகளால் ஒரு சிலர் நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக சித்தரிக்கப்படுகின்றனர். மேலும் மக்களின் உணவுப் பழக்கம், சமூக செயல்பாடுகளில் ஒருவித பதற்றம் நிலவுகிறது. மேலும் பேசிய அவர் முத்ரா திட்டத்தின் கீழ் வெறும் ரூ.43 ஆயிரம் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.