கரும்பலகையில் கணினி MS Word வரைந்து பாடம் நடத்திய ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கிய இந்திய நிறுவனம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு ஆப்பரிக்கா கானாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ரிச்சார்ட் அபியாக் அகோடோ என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் பள்ளியில் கணினி இல்லாத காரணத்தினால் தனது மாணவர்களுக்கு கரும்பலைகையில் கைகளால் மைக்ரோசாப்ட் வோர்ட்(MS Word) எப்படி செயல்படுகிறது என்பதை வரைந்து பாடம் நடத்தியுள்ளார். இவர் இப்படி வரைந்து பாடம் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலாக உலகம் முழுவதும் வீடியோவாக பரவியது. 


இந்நிலையில் இந்திய நிறுவனம் ஒன்று அந்த பள்ளிக்கு 5 கம்ப்யூட்டர்கள் மற்றும் 1 லேப் டாப் வழங்கி உதவியுள்ளது. இதுகுறித்து அக்ராவில் உள்ள என்.ஐ.ஐ.டி-யின் தலைமை மேலாளார் அஷிஷ் குமார் கூறியதாவது:- இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை நாங்கள் பார்த்தோம். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விவகாரத்தில் ஆசிரியரின் அர்ப்பணிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம். ஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனமாக நாங்கள் பள்ளிக்கு உதவியை செய்ய முடிவு செய்தோம் என கூறினார்.