வட மாநிலங்களான மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி மற்றும் தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணத்தட்டுப்பாடு காரணமாக, ஏடிஎம்கள் பணம் நிரப்பப்படாமால் இருப்பதால், பல ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பொது மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஏராளமான மக்கள், சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர். 


இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது:-


"பணத்தட்டுப்பாடு தொடர்பாக தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. போதிய அளவில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. திடீரென வழக்கத்திற்கு மாறான பணதேவை ஏற்பட்டதால், இந்த பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிக பிரச்சனை மட்டுமே. வங்கிகளிடம் பணம் கையிருப்பில் உள்ளது. எனவே விரைவில் சரி செய்யப்படும்" என கூறியுள்ளார். 



 


இந்நிலையில், பணத்தட்டுப்பாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தந்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது:-


 



 


இப்போது புரிகிறதா.. பணமதிப்பிழப்பின் விளைவு...
உங்கள் பணம் அதனையும் நீரவ் மோடியின் பாக்கெட்டில்...


மோடிஜியின் மாயா மூலம் தப்பிய மல்லையா போன்றவர்களால்...
பண நெருக்கடி மீண்டும் மக்கள் அவதிபடுகிறார்கள்....


நாட்டின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாமல் காலியாக உள்ளது...
வங்கிகளின் நிலமையை இப்படி செய்துவிட்டார் மோடிஜி....


என பண நெருக்கடி குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளார்.