IPL 2018 தொடரின்  50-வது போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகளின் மோதின. இந்த போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை அணி:-


முதலில் களமிறங்கிய எவின் லீவிஸ் 9 ரன் எடுத்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் (27), இஷான் கிஷான் (20) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய குர்னால் பாண்ட்யா (32) நம்பிக்கை தந்தார். போலார்டு, 22 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின் பந்தில் போலார்டு (50), பென் கட்டிங் (4) சிக்கினர். ஹர்திக் பாண்ட்யா (9) நிலைக்க வில்லை. மும்பை அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 186 ரன்கள் எடுத்தது.


பஞ்சாப் அணி:-


187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. முதலில் ஆடவந்த கெய்ல் வெறும் 18 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். லோகேஷ் ராகுல், பின்ச் ஜோடி சிறப்பாக விளையாடி வந்தனர். குர்னால் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த ராகுல் அரை சதம் எட்டினார். பின்னர் பும்ரா பந்தில் பின்ச் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் ஒரு ரன்னில் திரும்பினார். தொடர்ந்த அதிரடியாக விளையாடி வந்த ராகுல், பென் கட்டிங் பந்து வீச்சில் மூன்று பவுண்டரி விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த ராகுல், பும்ரா பந்தில் சிக்க 94 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மெக்லீனகன் வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. 3வது பந்தில் யுவராஜ் (1) அவுட்டானார். இதில் மொத்தமே 13 ரன் மட்டுமே கிடைக்க, பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது.