whatsappபயன்படுத்த 16 வயதை பெற்றிருக்க வேண்டும்: அதிர்ச்சி தகவல்!!
இனிமேல் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்த குறைந்த பட்சம் 16-வயதாவது பெற்றிருக்க இருக்க வேண்டும் என தகவல் வெளிவந்துள்ளது!
வாட்ஸ்ஆப் பொறுத்தவரை இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் சுமார் 89சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாகும், பின்பு 11 சதவீத மக்கள் கணினியில் பயன்படுத்துவதாகும் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.
குறிப்பாக வாட்ஸ்ஆப் சேவையை சிறுவர்கள் தினசரி 5-மணி நேரம் பயன்படுத்தவதாக ஆய்வில் அதிர்ச்சி வெளிவந்துள்ளது.
இதனால் அவர்களது கல்வி, விளையாட்டு போன்ற அனைத்தும் கேள்விக்குறியாகிறது.
எனவே வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த குறைந்தபட்சம் 16 வயதுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு ஒழுங்கு முறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய பயனர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த குறைந்தபட்சம் 16 வயதுள்ளவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், இதன் மூலம் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என அந்நாட்டின் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த புதிய விதிமுறை அனைத்து இடங்களுக்கும் வந்தால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.