வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு: கிம் ஜாங் வருகை!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடக்கிறது!
சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகி உள்ளது.
அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க முன்வந்தது.
இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சு நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையையொட்டி அவர்களுக்கு கிம் ஜாங் அன் விருந்து அளித்து சிறப்பித்தார் அவர்களுடன் மனம் திறந்து பேசினார்.
இது தொடர்பாக வடகொரியாவும், தென்கொரியாவும் ஒரு அறிக்கை வெளியிட்டது....!
அதில், தென்கொரியாவும், வடகொரியாவும் ஏப்ரல் மாதம் உச்சி மாநாடு நடத்த உள்ளன. 10 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது' என கூறப்பட்டுள்ளது.
இதற்காக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் தற்போது தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமிற்கு வருகை புரிந்துள்ளார்.
உச்சி மாநாட்டின் முதல் அமர்வு முடிந்த உடன் டுத்த அமர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவார்கள். கூட்டாக அறிக்கையும் வெளியிடுவார்கள்.
அதைத் தொடர்ந்து தென்கொரியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டவிருந்தில் இரு நாட்டு உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன.
அதைத் தொடர்ந்து ‘ஸ்பிரிங் ஆப் ஒன்’ (ஒரு வசந்தம்) என்ற வீடியோ திரையிடப்படும்.
அதை இரு தலைவர்களும் பார்வையிடுவார்கள். அதைத் தொடர்ந்து வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் நாடு திரும்புவார்.
இந்த மாநாடு, இரு நாடுகள் இடையேயான கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஜூன் மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது குறிப்பிடத்தக்கது.