மகாபாரத காலத்திலிருந்தே இன்டர்நெட் பயன்பாடு இருப்பதாக திரிபுரா முதல் அமைச்சர் பிப்லாப் தேப் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திரிபுரா முதல் அமைச்சர் பிப்லாப் கூறியதாவது: 


மகாபாரத காலத்திலிருந்தே இன்டர்நெட் பயன்பாடு உள்ளது. கண்பார்வையற்ற திரிதராஷ்டிரர், குருசேத்ர யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, போர்க்களத்தின் அருகே இல்லாதபோதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இது இணைய தொழில்நுட்பத்தினால் தான் நடந்துள்ளது. துணைக்கோள்களும் அப்போது இருந்துள்ளது. இணையம் இப்போதும் மக்களை இணைத்து வருகிறது.


பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைவருக்கும் இன்டர்நெட் சேவையை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளதாக அவர் கூறினார். மேலும் நமக்கு இப்போதைய தொழில் நுட்பம் புதுமையானது இல்லை. ஏற்கனவே நமக்கு தொழில்நுட்ப அறிவு இருந்ததுனால் தான் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் தலைமைப் பதவிகளில் இந்தியர்கள் உள்ளனர்”  என கூறியுள்ளார்.