தமிழகம் மற்றும் கேரள மீனவர்களுக்காக இஸ்ரோ புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ நிறுவனத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செயலி தொடர்பாக இன்று திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


செய்தியாளர்களிடம் இஸ்ரோ நிறுவனத் தலைவர் சிவன் கூறியதாவது....! 


"இயற்கை சீற்றங்களின் போது மீனவர்கள் எளிதாக கரை திரும்ப இஸ்ரோவின் நேவிகேஷன் செயலி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது மீனவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். இஸ்ரோவின் இந்த புதிய செயலி தமிழகம் மற்றும் கேரள மீனவர்களுக்கு வழங்கப்படும். பி.எஸ்.எல்.வி, ஜிசாட் உள்ளிட்ட இஸ்ரோவின் பல்வேறு திட்டங்கள்  தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது. இதனால் இஸ்ரோவில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்" என்றார்.