ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதியை முறைகேடாக பெற்றுத்தர உதவியதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்., 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.


பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தியது சிபிஐ. நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் 24-ம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் கார்த்தி சிதம்பரத்தை அடைக்க உத்தரவிட்டது. 


முன்னதாக கார்த்தி சிதம்பரத்திம் ஜாமின் மனுவின் மீதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 16-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஐ.என்.எக்ஸ். மீடியா பணமோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்க துறை கைது செய்வதற்கான தடையை மார்ச் 22ந்தேதி வரை நீட்டித்திருந்தது. 


இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கவும். பிணைத்தொகையாக ரூ.15 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.