ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் கொல்கத்தா அணி பேட்டிங்கை செய்தது. முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது கொல்கத்தா அணி. அடுத்தட மூன்று ஓவருக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து 24 ரன்கள் எடுத்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 100 ரன்களை கடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ட்ரே ரசலின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.


170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, தொடக்கம் முதலே நிதானமாக விளையாடியது. விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடியது என்றாலும், அதிரடியாக ரன்கள் குவிக்காததால், 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.


இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அமனி இரண்டாவது குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடக்க உள்ள இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் ஹைதரபாத் அணியை எதிக்கொள்கிறது.


கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஆண்ட்ரே ரசல். இவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். அவர் 3 பவுண்டரிகளும், 5 சிச்சரும் அடித்தார். அவர் அடித்த ஒரு சிச்சர் ஷாட், டென்னிஸ் விளையாட்டில் அடிப்பது போலே உள்ளது. அதன் வீடியோவை இணைத்துள்ளோம்.


வீடியோ:-