IPL_2018: 14 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
பெங்களூருவை தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில், களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான பார்த்திவ் பட்டேல் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் விராத் கோலி, 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு களமிறங்கிய டிவில்லியர்ஸ் - மொயின் அலி ஜோடி சிறப்பாக விளையாடியது. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, 218 ரன்னை குவித்தது.
219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றியைக் கைப்பற்றியது.