ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. 


IPL-2018: இனி IPL-லில் TRS முறை அறிமுகம்!


ஐ.பி.எல் தொடக்க விழா ஏப்ரல் 6-ந் தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் நேற்று பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார்கள். இவர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.


வீடியோ: ஐ.பி.எல் 11_வது சீசன் பாடல் 5 மொழிகளில் வெளியானது


சென்னை அணிக்கு மொத்தம் 25 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் எம்.எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ஹர்பஜன் சிங், ஜடேஜா, கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன், மிட்சல் சாண்டர், தீபக் சாஹர், கனிஷ்க் சேத், டியூ பிளசிஸ், அம்பதி ராயுடு, சாம் பில்லிங்ஸ், ஜெகதீசன் நாராயண், பிராவோ, துருவ் ஷோரி, சிட்ஸ் சர்மா, சைத்தானியா பிஸ்நோய், கரன் சர்மா, ஷரத்துல் தாக்குர், மார்க் வுட், முகமது இம்ரான் தாஹிர், ஆசிப் கே எம், லுங்கி சாணி கிடி, மோனு சிங் ஆவார்கள்.