IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தொடரின் 46-வது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ்மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது. 


முன்னதாக, டோனி தலைமையிலான சென்னை அணி, இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில்  7 -ல் வெற்றியும், 4 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ‘பிளே–ஆப்’ சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம். 


அதேபோன்று, கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி என்று 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கும் முன்னேறி விட்டது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் அந்த அணி சரிசம பலத்துடன் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.