IPL 2018 தொடரின் 26-வது போட்டியில் டெல்லி ட்ரேடெவில்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் நேற்று மோதின. இப்போட்டியில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் விளையாடும் 11 பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு காரணம் அணியின் புதிய தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தான் என விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனை மறுக்கும் வகையில் ஸ்ரேயஸ் "நேற்றைய போட்டியில் கம்பீர் வெளியேற்றப்பட்டது அவரது தனிப்பட்ட முடிவு, அணி தரப்பில் ஏதும் முடிவெடுக்கப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.


முன்னதாக, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்திய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார்.


அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது,. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணியால் 164 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 55 ரன்களில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் "கம்பீரின் வெளியிறுப்பு அவரது தனிப்பட்ட முடிவு, முன்னதாக 5 போட்டிகளில் தோல்வியை மட்டுமே பெற்றுதந்ததால் தானே போட்டியில் இருந்து விலகி இருந்தார்" என தெரிவித்துள்ளார்!