IPL 2018 தொடரின் 29-வது போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


இத்தொடரின் 29-வது போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.


முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளியேறினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி 68(44) ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு பலம் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர் இதனால் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது.


இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லெயின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 62(52) ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருக்கு துணையாக ராபின் உத்தப்பா 36(21) ரன்களும் சுனில் நரேன் 27(19) ரன்களும் குவித்தனர். இதனால் ஆட்டத்தின் 19.1-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை பரபரப்பான ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா அடைந்தது.


இந்த வெற்றியினை அடுத்து கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஐதராபாத் அணி முதலிடத்திலும், சென்னை இரண்டாம் இடத்திலும் உள்ளது....