கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடர் 11_வது சீசனின், இன்று நடைபெறும் 17_வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், சென்னை அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரண்டு அணிகளும் மேட்ச் பிக்சிங் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி இரண்டு ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு கழித்து ராஜஸ்தான் அணியும், சென்னை அணியும் முதல் முறையாக, இந்த சீசனில் மோத உள்ளது.


சென்னை அணி இதுவரை மூன்று லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் இரண்டில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் புள்ளி பட்டியலில் 4_வது இடத்தில் உள்ளது.


அதேபோல ராஜஸ்தான் அணி நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் புள்ளி பட்டியலில் 5_வது இடத்தில் உள்ளது.


ராஜஸ்தான் அணியும், சென்னை அணியும் நேருக்கு நேர் விளையாடியதில் சென்னை 11-ல் வெற்றியும், ராஜஸ்தான் 6-ல் வெற்றியும் பெற்றுள்ளது.


இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டு அணியும் மோதுவதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


இன்று நடக்கும் ஐபில் போட்டோயில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்றது. ஆனால் தாங்கள் முதலில் பவுலிங் செய்வதாக அந்த அணியுன் கேப்டன் ரஹேனே தெரிவித்தார்.