IPL 2018: மும்பை அணியை பந்தாடிய டெல்லி அணி!
IPL 2018 தொடரின் 55-வது போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் 55-வது போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 55-வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இன்று மோதின. டெல்லி பெரோஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து டெல்லி அணியின் சார்பில் பிரத்திவி ஷா 12(8) மற்றும் க்ளேன் மேக்ஸ்வெல் 22(18) களமிறங்கினர். இவர்களை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஷ் ஐயர் 6(10) வெளியேற ரிஷாப் பந்த நின்று விளையாடி 44 பந்துகளில் 64 ரன்களை குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.
பின்னர் விஜய் சங்கர் 43(30) மற்றும் அபிஷேக் ஷர்மா 15(10) நிதானமாக விளையாடி இறுதிவரை களத்தில் நின்றனர். இதனால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளனர்.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய யாதவ் 12(4) ரன்களில் வெளியேற எவின் லிவிஸ் 48(31) எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். எனினும் இதர வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்த வெளியேறினர்.
இதனால் ஆட்டத்தின் 19.3-வது ஓவரில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.