IPL 2018: பெங்களூரை வீழ்த்திய மும்பை அணிக்கு முதல் வெற்றி!
IPL 2018, 14-வது லீக் போட்டியில் பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் 46 அபார வெற்றி பெற்றது.
IPL 2018 தொடரின் 11-வது போட்டியில் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் பெங்களுரு அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங்செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது.
பெங்களூர் அணியின் சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ், கோரி ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளும் வோக்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது.
ஆரம்பம் முதலே தடுமாறிய பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக குர்னல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் மெக்கினெக்கான் தலா 2 விக்கெட்டுகளும், மார்கண்டே 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம், மும்பை இந்தியன் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. இதனால் ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த அணி ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களுரு அணியை எதிர்கொண்டு 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.