IPL_2018: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்!
IPL 2018 தொடரின் 6வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மற்றும் டெல்லி அணிகள் நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
IPL 2018 தொடரின் 6வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மற்றும் டெல்லி அணிகள் நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானேவும், டி ஷார்ட் முதலில் களமிறங்கினர். இதில் ஷார்ட் 6 ரன்களில் ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 22 பந்தில் 37 ரன்களில் அவுட்டானார். ரகானே 45 ரன்களில் அவுட்டானார். பட்லர் 18 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையொட்டி ராகுல் திரிபாதி 15 ரன்களுடனும், கவுதம் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
விடமால் மழை தொடர்ந்ததால், டெல்லி அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக மேக்ஸ்வெல் மற்றும் காலின் முன்ரோ களமிறங்கினர். முதல் பந்திலேயே முன்ரோ ரன் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார். இதில் மேக்ஸ்வெல் 17 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கிறிஸ் மாரிஸ் களமிறங்கினார். இறுதியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.