ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் நாளை தொடக்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தத்தை ரூ. 16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் (Star India Private Ltd) பெற்றுள்ளது. இந்த போட்டிகள் ஸ்டார் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல்களில் மட்டுமே ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒரு சந்தோசமான அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


அதாவது, ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் முதல் முறையாக தூர்தர்ஷனில் (Doordarshan) ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் எனக் கூறியுள்ளது. மேலும் ஐ.பி.எல். போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டது.


ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் ஒரு மணி நேர தாமதமாக ஒளிபரப்பப்படும். இது சர்வதேச கிரிக்கெட் போட்டி அல்ல. எனவே கேபிள் இல்லாத வீட்டிலும், கேபிளுக்கு பணம் கட்டமுடியாதவர்களுக்காக தூர்தர்ஷனில் (DD network) ஒளிபரப்பப்படுவது உபயோகமாக இருக்கும் என "ஸ்டார் தலைமை நிர்வாக அதிகாரி உதய் ஷங்கர்" கூறினார்.