ஐபிஎல் போட்டியின் 25-வது லீக்  போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். 


இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.


ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 54 ரன்கள் எடுத்தார். 


பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் களமிறங்கினர். 


ஆரம்பம் முதலே மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இருவரும் ஐதராபாத் அணியினரின் பந்து வீச்சை சிறப்பான முறையில் எதிர்கொண்டனர்.


இறுதியாக அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்து, ஐதராபாத் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.


இதையடுத்து, நாளை நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தின் 26-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.