நவம்பரில் நினைத்ததெல்லாம் நடக்கும்... இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது 'அதிர்ஷ்ட மழை'

நடப்பு நவம்பர் மாதத்தில் ஜோதிடத்தின்படி பல்வேறு கிரக பெயர்ச்சிகள் நடைபெறும் நிலையில், அது இந்த மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். அந்த 3 ராசிகள் குறித்து இதில் காணலாம். 

  • Nov 04, 2024, 10:28 AM IST

நவம்பர் மாதத்தில் சூரியன், சுக்கிரன், சனி உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால் ஜோதிடத்தில் இது சிறப்பான மாதமாக பார்க்கப்படுகிறது.

 
1 /8

ஜோதிட சாஸ்திரத்தின்படி, உங்கள் வாழ்க்கை சௌகரியத்தை, செல்வத்தை, செழிப்பை வழங்குவது சுக்கிரன்தான். அந்த வகையில் வரும் நவ.7ஆம் தேதி மதியம் 3:40 மணிக்கு சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது.   

2 /8

அதேபோல், வரும் நவ. 15ஆம் தேதி மாலை 5:11 மணிக்கு சனிபகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். சுரியனும் துலாமில் இருந்து விருச்சிக ராசிக்கு நவ. 16ஆம் தேதி காலை 7:39 மணிக்கு பெயர்ச்சி அடைய உள்ளது. தொடர்ந்து புதன் கிரகம் வக்ர நிலையில் நவ.26ஆம் 7:40 மணிக்கு மாற்றமடைகிறது. இது சில ராசிகளுக்கு அசுபமானது.  

3 /8

நவ. 28ஆம் தேதி 1:11 மணிக்கு வியாழன் கிரகம் மிருகஷிரிஷம் நட்சத்திரத்தில் இருந்து ரோஹினி நட்சத்திரத்திற்கு மாற்றமடைகிறது. இது மேஷம், மிதுனம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளுக்கு சுபமாக அமையும்.   

4 /8

மேலும், இந்த மாதத்தில் நடைபெறும் இத்தனை கிரக பெயர்ச்சிகளால் இந்த மூன்று ராசிகளின் அதிரிஷ்டம் இரட்டிப்பாகும். இந்த மூன்று ராசிகள் நினைத்தெல்லாம் நடக்கும் எனலாம். அந்த மூன்று ராசிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.   

5 /8

கடகம்: வேலைத் தேடி வரும் கடக ராசிக்காரர்களுக்கு விரைவில் புதிய வேலை உறுதியாகிவிடும். நினைத்த காரியமெல்லாம் நடக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் ஓடிவிடும்.   

6 /8

சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் சாதகமாக சூழல் நிலவும். திருமண உறவில் நிலவும் பிரச்னைகளும் தீரும். உங்கள் பார்ட்னருடன் நேரத்தை நன்கு செலவிடும் தருணங்கள் அணையும்  

7 /8

தனுசு: இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பணம் சார்ந்த ஆதயங்கள் இந்த காலகட்டத்தில் அதிகம் ஏற்படும். மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் மன அழுத்தத்திற்கு நிவாரணம் கிடைக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை.