IPL _2018: இன்றைய களத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்!
இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன!
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடக்கும் 33வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் தலா 8 போட்டியில் விளையாடியுள்ளன.
அதில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று கொல்கத்தா 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைக்கும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.
சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய ஆட்டங்களில் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, ஷேன் வாட்ன், பிராவோ, போன்ற வயதில் சீனியர் வீரர்களே அதிரடி ஆட்டத்தில் கலக்கி வருகின்றனர். பேட்டிங்கில் தோனி 286 ரன்களும், ஷேன் வாட்சன் 281 ரன்கள், பிராவோ 118 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் ஷேன் வாட்சன் மற்றும் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டங்கள் எதிரணிகளை மிரள வைத்துள்ளன. இவர்களைத் தவிர சுரேஷ் ரெய்னா 205 ரன்கள், அம்பதி ராயுடு 370 ரன்கள் குவித்துள்ளனர்.
அதேபோல், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் முனைப்பில் கொல்கத்தா அணி உள்ளது. இவ்விரு அணிகளும் முன்னதாக சென்னையில் விளையாடிய லீக் போட்டியில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.