நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வேற்றவென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால், பெங்களூரு அணி முதலில் ஆட்டத்தை தொடங்கியது. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது. பின்னட் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 


இந்த ஆட்டத்தில் பெங்களூரு வீரர் மொயின் வீசிய பந்தை ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரான அலெக்ஸ் ஹால்ஸ் தூக்கி அடுத்தலில் எல்லைக்கோட்டை தாண்டி சென்ற பந்தை கோர்ட்டில் அருகில் நின்ற டிவில்லியர்ஸ் பாய்ந்து ஒரே கையில் கேட்ச் பிடித்தார். இந்த காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதுக்குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஸ்பைடர்மேனை இன்று நேரிலேயே பார்த்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.