IPL_2018: 14 பந்துகளில் 50 ரன்கள் அடித்து KL ராகுல் சாதனை!
T20 போட்டிகள் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்தவர் என்ற பெருமையினை KL ராகுல் பெற்றுள்ளார்!
T20 போட்டிகள் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்தவர் என்ற பெருமையினை KL ராகுல் பெற்றுள்ளார்!
IPL 2018 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் Kings XI Punjab மற்றும் Delhi Daredevils அணிகள் விலையாடி வருகின்றன. மொகாலியில் நடைப்பெற்று வரும் இந்த இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற Kings XI Punjab அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த Delhi Daredevils அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 166 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கொலின் ரசிகர்களை ஏமாற்றிய போதிலும், கவுத்தம் கம்பீர் நிதானமாக விலையாடி அணிக்கு பலம் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் கம்பீர் 55(42), ரிஸ்சாப் 28(13), மோரிஸ் 27(16) ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் மோஹித் ஷர்மா மற்றும் முஜீப் ரஹுமான் தன 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. விருவிருப்பாக துவங்கிய ஆட்டத்தினில் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டகாரர் KL ராகுல் 16 பந்துகளில் 51 ரன்கள் குவித்து வெளியேறினார்.
வெறும் 14 பந்துகளில் தனது அரை சதத்தினை எட்டிய அவர் T20 போட்டிகள் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்தவர் என்ற பெருமையினை பெற்றார்.
இதற்கு முன்னதாக யூசப் பதான், சுனில் நரேன் 15 பந்துகளிலும், சுரேஷ் ரெய்னா 16 பந்துகளிலும் இந்த சாதனையினை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!