IPL 2018 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் Kings XI Punjab 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் Kings XI Punjab மற்றும் Delhi Daredevils அணிகள் மோதின. மொகாலியில் நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற Kings XI Punjab அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. 


இதனையடுத்து பேட்டிங் செய்த Delhi Daredevils அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 166 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கொலின் ரசிகர்களை ஏமாற்றிய போதிலும், கவுத்தம் கம்பீர் நிதானமாக விலையாடி அணிக்கு பலம் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் கம்பீர் 55(42), ரிஸ்சாப் 28(13), மோரிஸ் 27(16) ரன்கள் எடுத்தனர். 


பஞ்சாப் அணி தரப்பில் மோஹித் ஷர்மா மற்றும் முஜீப் ரஹுமான் தன 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.


இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. விருவிருப்பாக துவங்கிய ஆட்டத்தினில் பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டகாரர் KL ராகுல் 16 பந்துகளில் 51 ரன்கள் குவித்து வெளியேறினார். 


எனினும் இதர வீரர்கள் அதிரடியாக ஆடி அணியினை வெற்றிப் பாதைக்கு கொண்டுச் சென்றனர். பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் 51(16), கருன் நாயிர் 50(33) ரன்கள் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து 167 ரன்கள் எடுத்தது.



இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.