காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டதை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலஸ்தீன - இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முயற்சித்தனர்.


போராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பாலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. 


இந்த தாக்குதல் சம்பவங்களில் இது வரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.