பார்லிமென்ட்-ல் பாஜக அரசுக்கு எதிராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்போம் என அதிமுகவை சேர்ந்த முன்னாள் பார்லிமென்ட் உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்தார். இந்த கருத்து தெரிவித்த அவரி அதிமுகவில் இருந்து உடனடியாக அதிரடியாக நீக்கப்பட்டார்.


இந்நிலையில் தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் விளக்கம் ஒன்று கொடுத்து உள்ளது. அதில்,


பிறர் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நமக்கென்ன பயன்? 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை தீர்மானம் கொண்டுவந்து வீட்டுக்கு அனுப்பியது அதிமுகதான். 


பாஜக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால் அது அதிமுகவால் முடியும். ஆனால் பாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நோக்கம் என கூறப்பட்டுள்ளது