காவிரி விவகாரம் குறித்து பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் தலைமையில் நேற்றி டெல்லியில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட முதல்வர் பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தெரிவிக்கையில்...


காவிரி விவகாரம் குறித்து பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது என தெரிவித்தார். மேலும் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருவதைப் போல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி இந்தியா முழுவதும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தி வேண்டும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


அதே வேலையில்., திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தை, மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி அதற்கு ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


முன்னதாக நேற்றைய தினம் தமிழக முதல்வர் டெல்லி பயணம் மேற்கொள்கையில், அவர் பிரதமரை சந்தித்து காவிரி பிரச்சணை குறித்து பேசுவார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வினவுகையில்... தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவிரி விவகாரம் குறித்தும் முழு விளக்கம் முன்னதாக அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் அனைத்துக்கட்சி தலைவர்களையும் பிரதமர் அழைத்து பேசுவார் என நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் காவிரி விவகாம் குறித்து பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது என தனது கருத்தினை அவர் தெரிவித்தார்!