Jesus Bible Stories: உன்னுடைய பிராத்தனை எப்படி இருக்க வேண்டும்!
\புதிய ஏற்பாடில் மத்தேயு 6-ம் அதிகாரத்தின் சுவிசேஷ செய்திகள் தரப்பட்டுள்ளன. கடவுளிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்னும் வசனம் பற்றி பார்போம்!
பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய கதைகள், மக்களை நல்வழிபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.
இன்றைய நாளில் மத்தேயு 6-ம் அதிகாரத்தில் தரப்பட்டுள்ள சுவிசேஷ செய்திகளை பற்றி பார்போம்!!
நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.
அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்!
அன்றியும் நீ ஜெபம் பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்!
நீயோ ஜெபம் பண்ணும் போது, உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது!
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக.
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளேயாகும் என்று கூறி ஜெபம் பண்ண வேண்டும்.