குஜராத் மாநிலத்தின் சுயேட்சை MLA ஜிக்னேஷ் மீவானி இன்று காலை ஜெய்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாக்பூரில் நடைப்பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற் சென்ற மீவானியை, ஜெய்பூர் விமான நிலைய அதிகாரிகள் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்டுள்ளதாவது....




"ஜெய்பூர் காவலர்கள் இருவர் இன்று காலை என்னிடம் விமான நிலையத்தில் வைத்து கடிதம் ஒன்றில் கையொப்பம் வாங்க முற்பட்டனர். அந்த கடிதத்தில் நான் அத்துமீறி நுழைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.


ஜெய்பூரினுள் என்னை அனுமதிக்க முடியாது எனவும், அஹமதாபாத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் கூறினர். அவர்கள் கூறியதன் காரணத்தை கேட்டதற்கு அவர்களிடன் இருந்து சரியான பதில் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்த காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது... மார்ச் 2-ல் நடைப்பெற்ற பாரத் பந்திற்கு பிறகு நகரினுள் அசம்பாவிதங்கள் நடைப்பெறாமல் இருக்க 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மீவானியை அனுமதிக்க முடியாது என தெரிவித்தாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது!