JNU பேராசிரியர் அதல் ஜோஹரி பல்கலை கழக்கத்தினுள் வரக்கூடாது என மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி ஜெவஹர் லால் நேரு பல்கலை கழகத்தில் வாழ்க்கை அறிவியல் துறை பேராசிரியராக இருப்பவர் அதல் ஜோஹரி. Mphil, P.hd மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் இவர் மீது பாலியல் தூண்டல் வழக்கு பதியப்பட்டது. "வகுப்பு நேரங்களில் தன்னை அத்துமீறி தொடுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புருத்துவதாகவும்" JNU மாணவி ஒருவர் புதுடெல்லி வசந்து குஞ்ச் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


இதுதொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


பின்னர் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் அதல் ஜோஹரி பல்கலை நிர்வாக பணியில் இருந்து விலகினார். எனினும் மாணவர்களின் போராட்டம் தொடர, தென்மேற்கு பகுதி காவல் நிலைய அதிகாரி மில்லிண்ட் தும்பரே பேராசிரியின் மீது IPC 354, 509 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டத்தினை கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டார். 


ஆனால் இதற்கு மாறாக, இந்நிகழ்வினை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரின் மீது JNU மாணவிகள் கூடுதலாக 6 பேர் பாலியல் தூண்டல் புகார் அளித்தனர். எனினும் காவல்துறை தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று முன்னதாக டெல்லி வசந்து கஞ்ச் பகுதியில் CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இதனையடுத்து நேற்று மாலை குற்றம்சட்டப் பட்ட பேராசிரியர் அதல் ஜோஹரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் நிருத்தப்பட்டார். இதனையடுத்து தான் கைது செய்யப்பட்டால் தன் பணிக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் ஜாமின் கோரி விண்ணப்பித்தார். இதனையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.



இந்நிலையில் தற்போது, பல்கலை பொருப்பில் இருந்து பேராசிரியர் நீக்கப்படவேண்டும் எனவும், அவர் மீண்டும் கல்லூரியினுள் வரகூடாது எனவும் JNU மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்!