சமீபகாலமாக சினிமா உலகில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து வரும் கலாச்சாரம் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சினிமா வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து காலா பட நடிகை ஹூமா குரேஷி கருத்து கூறும்போது.....!


திரையுலகில் மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே இதுபோன்ற பாலியல் தொல்லைகள் இருக்கிறது. அட்ஜஸ்ட் செய்வது திரைத்துறையில் மட்டும் அல்ல அது அதிகாரத்தை பொருத்தது என்று நினைக்கிறேன்.


ஒரு பெண் தைரியமாக பாலியல் தொல்லை குறித்து பேசினால் உதவி கேட்கிறார் என்று அர்த்தம். உடனே அவரின் கேரக்டரை டேமேஜாக்கக் கூடாது. மாறாக அவருக்கு உதவி செய்து, பாதுகாக்க வேண்டும். நமது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.