சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் வணிகர் சங்க தினத்தில் 35 வது ஆண்டு மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் சிறப்புரையாற்றி வருகின்றனர். 


இந்நிலையில், தற்போது இதில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-


அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறைகளுடன் வணிகத்துறையும் இணைவது அவசியம். கிராமசபை கூட்டங்களில் வணிகர்களும் பங்கேற்பது முக்கியம்.கிராம சபைகளில் பங்கேற்றால் வணிகமும் மேம்படும்.


நாம் கொடுக்கும் வரிப்பணத்தில், வட மாநில விவசாயிகள் நிவாரணம் பெறுகின்றனர். ஆனால், நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள்.


தமிழ்நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது, தமிழகம் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்திருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.