காவிரி விவகாரம் குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார். பெங்களூருவில் உள்ள முதல்வர் இல்லத்தில் குமாசாரசாமியை சந்தித்து கமல்  பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சந்திப்பில் காவிரி பிரச்சனை மற்றும் தமிழ் சினிமாக்களை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்தும் கமல் கர்நாடாக முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து அவர் வலியுறுத்தினார்.  


இதனையடுத்து  கமல்ஹாசன் மற்றும் குமாரசாமி ஆகிய இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்..! அதில் சகோதரத்துவத்துடன் இருமாநிலங்களும் இருக்க வேண்டும் என கமல் வலியுறுத்தியுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். 


மேலும், காவிரி விவகாரத்தில் இரு மாநில விவசாயிகளின் நலன் கருதி முடிவு எடுக்கப்படும் என குமாரசாமி உறுது கூறியுள்ளார். 


அப்போது பேசிய கமல், காலா திரைப்படம் தொடர்பாக  படக்குழுவினர் கவனித்துக்கொள்வர். திரைப்படங்களை விட தண்ணீர் முக்கியம். எனவே, நான் தமிழக மக்களின் சார்பாக கர்நாடக மக்களின் பிரதிநிதியை சந்தித்துள்ளேன். 


இரு மாநிலங்களுக்கு இடையேயான விவகாரத்தை இரு மாநில மக்களும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் அவர், குமாரசாமியுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல மக்கள் நலனுக்கானது என்று தெரிவித்துள்ளார்.