224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரத்தால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியும், காங். தலைவர் ராகுலும் ஏற்கனவே தங்கள் பிரசாரத்தை துவக்கி விட்டனர். இருவரும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 


இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், கர்நாடகவுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக-வின் முதல்வர் வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.


அதை தொடர்ந்து, கர்நாடக பா.ஜ., நிர்வாகிகளிடம் நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.


அப்போது அவர் கூறும்போது....!


அனைத்து இடங்களிலும் கர்நாடக இளைஞர்கள் தங்களின் திறமையை நிரூபித்து வருகிறார்கள். கட்சி தொண்டர்கள் அடிமட்டத்தில் இருந்து மக்களுக்காக உழைத்து வருவது பா.ஜ.,வுக்கு அதிர்ஷ்டம். கர்நாடகாவில் பா.ஜ., வெற்றி பெற்ற பிறகு கர்நாடகாவில் 60 இடங்களில் நம்ம பிபிஓ காம்ப்ளக்ஸ்கள் உருவாக்கப்படும். 


உலக தரத்திலான 5 விளையாட்டு மையங்கள் கர்நாடகாவில் அமைக்கப்படும். இந்தியாவின் நேரடி அன்னிய முதலீடு உச்சநிலையை அடைந்துள்ளது. ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்பதால் அதை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாதவர்கள் தான் வன்முறை அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். 


பல மாநலங்களில் பா.ஜ., நிர்வாகிகள் கொல்லப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. இந்திரா படுகொலைக்கு பிறகு அரசியலில் வன்முறை ஒரு அங்கமாகி விட்டது இவ்வாறு அவர் பேசினார்.