கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பலயுக்திகளை கையாண்டு வருகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது - கர்நாடக அரசு!


தேர்தல் பிரசாரத்தின் போது சித்தராமையாவை தரக்குறைவாக விமர்சனம் செய்ததா கூறி, பிரதமர் மோடி, அமித் ஷா, எடியுரப்பா 100 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


அந்த நோட்டீஸில் கூறப்பட்டதாவது:-


"கார்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி மற்றும் பாஜக-வினர், முதல் அமைச்சர் சித்தராமையாவை பற்றி பொய்யான தகவல்களை கூறுவதொடும், தரக்குறைவான வாரத்தைகளாலும் விமர்சனம் செய்கின்றனர். இவர்கள கூறும் தகவல்கள் முற்றுலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை. முதல் அமைச்சர் சித்தராமையாவின் நன்மதிப்பையும், புகழையும் கெடுக்கவே பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் எனது கட்சிக்காரர் சித்தராமையா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 


#Karnataka: இளைஞர்கள் தங்களின் திறமையை நிரூபிக்கிறார்கள்: மோடி!!


பிரதமர் மோடி மற்றும் பாஜக-வினரின் இத்தகைய செயல் சட்டத்தின்படி தண்டனைக்குறிய குற்றமாகும். எனவே பொய் பிரசாரம் செய்து முதல் அமைச்சர் சித்தராமையாவின் நன்மதிப்புக்கு கலங்கம் ஏற்படக் காரணமானவர்கள் இழப்பீடாக ரூ 100 கோடி மற்றும் எனது கட்சிக்காரரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.