கர்நாடக முதல்வர் வேட்புமனு குறித்து பாஜக பொதுச்செயலாளர் வினவுகையில் அதற்கு பதில் அளிக்காமல், அவரின் ட்விட்டினை விமர்சிக்கும் வகையில் சித்தராமையா பதிவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.


ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.


இதனையடுத்து, மைசூரு மாவட்டத்தின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று காலை தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்... வட கர்நார்டாக பகுதியில் இருக்கும் பாதாமி தொகுதி மக்கள் தன்னை அத்தொகுயில் போட்டியிடமாறு கோருவதாகவும், தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்து இருந்தார்.



இந்நிலையில், இவரது வேட்புமனைவை தொடர்ந்து பாஜக பொதுச்செயலாளர் P முரளிதர் ராவ் அவர்கள் "இரண்டு தொகுதிகள் குறித்த குழப்பத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. உங்கள் குழப்பத்தில் இருந்து வெளிவர நான் உதவுகிறேன்... நீங்கள் போட்டியிட நினைக்கும் 2 தொகுதிகளில் மட்டுமல்ல, அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் விலகியே இருக்கும்" என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.



இந்த பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள்.... ஆங்கிலம் அல்லது கன்னடாவில் பதிவிடுங்கள், எனக்கு ஹிந்தி மொழி தெரியாது என தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் பெருமளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.