12:22 16-05-2018
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு செயப்பட்டுள்ளார்!




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.,104 இடங்களை வென்றுள்ள போதிலும் ஆட்சியமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது. 


இது தொடர்பாக குமாரசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது..!


காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துவிட்டோம். இதனடிப்படையில், எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கு இடமில்லை என்றார். 


இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், எம்எல்ஏக்கள் மீது மத சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது. யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். பா.ஜ., என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கட்டும் என்றார். நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் யாரும் உடைக்க முடியாது என்றார்.


எனினும், மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாதகவுடா கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.