கர்நாடக தேர்தலில் படுதோல்வி அடைந்த வாட்டாள் நாகராஜ்!
தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக பல கருத்துகளை பேசி வந்த சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார்!
தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக பல கருத்துகளை பேசி வந்த சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் சாம்ராஜ்நகர் தொகுதியில் வெறும் 5977 வாக்குகளை மட்டும் பெற்று படுதோல்வியடைந்துள்ளார்!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக 104 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், மஜத 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், சாம்ராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புட்ட ரங்க ஷெட்டி 75,963 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த படியாக பஜக வேட்பாளர் மல்லிகர்ஜுனப்பா 71,050 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அந்த தொகுதியில் வாட்டாள் நாகராஜ் 5977 வாக்குகள் மட்டுமே பெற்று 5வது இடம் பிடித்துள்ளார்.