ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக! பின்னாடியே துரத்தும் காங்கிரஸ்!
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவின் 224 சட்டசபை தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து இன்று காலை 8- மணிக்கு தொடங்கி தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் பாஜக- 107 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 67 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் - 45 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
கர்நாடகா சாமுண்டேஷ்வரி தொகுதியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விட 11,624 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா முன்னிலையில் உள்ளார்.
அதேபோன்று, பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா அவர் போட்டியிட்ட சிகாரிபுரா தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
முன்னதாக, 2013 தேர்தலில் காங்கிரஸ் 224 தொகுதிகளில் 123 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.