கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி இன்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் ஆட்சி முடிவடையும் நிலையில் கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் டெல்லியில் தெரிவித்து உள்ளார்.


வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது. வேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 


மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க வாக்குச் சாவடி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே வாக்காளர்களுக்கு வழங்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். கர்நாடக மாநிலம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு, தேர்தல் நடத்தை முறைகள் பொருந்தும்


> வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி முதல் தொடங்கப்படும். 


> வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24-ம் தேதி முடிவடையும். 


> கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறும்.


> வாக்கு எண்ணிக்கை மே 15-ம் தேதி நடைபெறும். 


> 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.  


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.