224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரத்தால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியும், காங். தலைவர் ராகுலும் ஏற்கனவே தங்கள் பிரசாரத்தை துவக்கி விட்டனர். இருவரும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 


இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், கர்நாடகவுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக-வின் முதல்வர் வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.


அதை தொடர்ந்து, சித்ரதுர்கா என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியதாவது.....!


அம்பேத்கார் இறந்து  பல ஆண்டுகள் ஆகியும் காங்கிரஸ் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. காங்கிரஸ் தலைவர்களை பெருமைப்படுத்திய அக்கட்சி, அம்பேத்காரை காத்திருக்க வைத்தது. 


ஆனால், அம்பேத்காரின் பெருமைகளை நாங்கள் உலகிற்கு அறிமுகபடுத்தினோம். முதன்முறையாக அம்பேத்கார் பிறந்த நாளை கொண்டி வருகிறோம் என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களை பா.ஜ., தான் ஜனாதிபதியாக்கியது. தற்போது, நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளதை காங்கிரஸால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை மையமாக வைத்து அக்கட்சி குறை கூறி வருகிறது. 


கர்நாடக மக்களே நான் பிற்படுத்தப்ப்டட வகுப்பை சேர்ந்தவன் என்பதால், எப்போதும் உங்களுடன் தான் இருப்பேன் என்று உறுதியளித்தார்.