கேரளா: கேரளா மாநில பள்ளிகல்வித் துறை அம்மாநில 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா மாநிலத்தில் கடந்த மார்ச் 7 முதல் மார்ச் 28 வரை, 10-ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் நடைப்பெற்றன. இத்தேர்வின் முடிவுகளை கேரளா பள்ளிக் கல்விதுறை இன்று வெளியிட்டுள்ளது.


சுமார் 3000 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வில் 4,41,103 மாணவரகள் பங்கேற்றனர். தேர்வு எழுதிய 4,41,103 மாணவர்களில் 97.84% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்சி விகிதாமானது கடந்தாண்டை விட 2% அதிகமாகும். எனினும் A+ கிரேடில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 34,313 ஆக எட்டியுள்ளது!


தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?


  • www.kerala.gov.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.

  • இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் Result எனும் பொத்தானை கிளிக் செய்யவும்.

  • அல்லது Result எனும் இணைப்பினை கிளிக் செய்யவும்.

  • கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.

  • பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.

  • பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.