கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 67,303 வாக்குகள் பெற்று 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் 46347 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் பிள்ளை 35270 வாக்குகள் பெற்றார் என்பது குறிபிடத்தக்கது.


10 மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பம்மாகியது. 


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், கேரள மாநிலம் செங்கனூர் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்..


உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல், நூர்பூர் (உ.பி.), ஷாகோட் (பஞ்சாப்), ஜோகிஹட் (பிஹார்), கோமியா மற்றும் சில்லி (ஜார்க்கண்ட்), செங்கணூர் (கேரளா), பாலுஸ் கடேகான் (மகாராஷ்டிரா), அம்பட்டி (மேகாலயா), தாரலி (உத்தராகண்ட்), மகேஷ்தாலா (மேற்குவங்கம்) ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தல் நடந்தது. கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடந்தது. இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.