சச்சினுக்காக தனி நூலகம்; கேரளா பேராசிரியர் அசத்தல்!

கோழிகோடு மலபார் கிறிஸ்டெய்ன் கல்லூரி பேராசிரியர் ஒருவர் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை புத்தகங்கள் 60-னை கொண்டு நூலகம் ஒன்றினை துவங்கியுள்ளார்!
கேரளா: கோழிகோடு மலபார் கிறிஸ்டெய்ன் கல்லூரி பேராசிரியர் ஒருவர் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை புத்தகங்கள் 60-னை கொண்டு நூலகம் ஒன்றினை துவங்கியுள்ளார்!
கேரளா மாநிலம் கோழிகோடு மலபார் கிறிஸ்டெய்ன் கல்லூரியில் வரலாற்று துறை பேராசிரியராக இருப்பவர் வஸிஸ்த் மணிகோந்த். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு சச்சினின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய 60 புத்தகங்களை கொண்டு நூலகம் ஒன்றினை துவங்கியுள்ளார்.
இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ள புத்ததகங்கள் பன்மொழி அடங்கியதாக உள்ளது. மலையாளம், தமிழ், மராத்தி, குஜராத்தி, ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.