முக்கனிகளில் ஒன்றான பலா பழமானது கேரளத்தில் அதிக அளவில் விளைவிக்கப் படுகிறது. மேலும் பலா மரங்களை பயிருடவதிலும் பலதர பலா மரங்களை விளைவிப்பதிலும் கேரள மக்கள் அலாதி பிரியம் கொண்டவர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கள் மாநிலத்தில் பெருமளவில் விலைவிக்க வைக்கப்படும் பலா-வின் உற்பத்தியினை அதிகரிக்க பல நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு படியாக சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் "மாநிலத்தின் பழமாக பலாப்பழத்தை அங்கீகரித்து வரும் 21-ம்தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட உள்ளோம்" என திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில் கேரளாவில் விளைவிக்கப்படும் "பலாப்பழத்துக்கு தனி மகத்துவம் உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பழம் இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படுவதால், கேரள பலாப்பழத்துக்கென தனிச்சுவை இருக்கிறது. எனவே பலாப் பழத்துக்கு மாநில பழம் என்னும் அங்கீகாரம் அளிப்பதன் மூலம் இனி மக்கள் பலாப்பழம் தொடர்பான உணவுப் பொருட்களை அதிகமாக தயாரிப்பார்கள், விற்பனை செய்வார்கள் என நம்புகிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தின் பழமாக பலாப்பழத்தை அங்கீகரித்து கேரள சட்டமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தற்போது கேரளா மாநிலத்தின் விளங்காக யானை, பறவை வேழாம்பல், பூ கனிகொந்னா, மரம் தென்னை என அனைத்திலும் தனி சிறப்பு பொருட்களை கொண்டுள்ளது.